காஸாவில் மீண்டும் தாக்குதல் - 400 பேர் பலி

67பார்த்தது
காஸாவில் மீண்டும் தாக்குதல் - 400 பேர் பலி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா பகுதியில் இன்று(மார்ச்.18) அதிகாலை இஸ்ரேல் நடத்திய திடீர் வான்வெளித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 413 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 2023ஆம் ஆண்டு முதல் போர் நடந்துவந்த நிலையில், கடந்த ஜனவரி 19 முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுப்பு தெரிவித்ததால் காஸாவை தாக்க, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். இதனால் மீண்டும் அங்கு போர் பதற்றம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி