கள்ளத்தொடர்பு.. திருமணமான 1 மாதத்தில் மனைவி தற்கொலை

62பார்த்தது
கள்ளத்தொடர்பு.. திருமணமான 1 மாதத்தில் மனைவி தற்கொலை
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (27) மற்றும் பாக்கியலட்சுமி (24) ஆகியோர் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.16) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாக்கியலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த போலீசார் விசாரணையில், பூபாலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை அறிந்த நிலையில், பாக்கியலட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி