விஜயகாந்திடம் இருந்து பிரேமலதாவுக்கு வந்த பிறந்தநாள் வாழ்த்து.. நெகிழ்ச்சி

61பார்த்தது
விஜயகாந்திடம் இருந்து பிரேமலதாவுக்கு வந்த பிறந்தநாள் வாழ்த்து.. நெகிழ்ச்சி
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச். 18) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் மறைந்த விஜயகாந்தின் எக்ஸ் பக்கத்தில் இருந்து அவர் தனது மனைவியை வாழ்த்தி பதிவிட்டது போல, "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என பதிவிடப்பட்டுள்ளது. விஜயகாந்த், பிரேமலதாவை நிஜமாக வாழ்த்துவது போலவே அப்பதிவு உள்ளது என தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

தொடர்புடைய செய்தி