ஆஸ்திரேலியாவில் கிளப் கிரிக்கெட் போட்டியின்போது, ஜுனைத் ஜாபர் கான்(40) என்ற வீரர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைத் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் ஞாயிறன்று கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றிருந்தார். அப்போது வெயில் 104 டிகிரிக்கும் மேல் இருந்த நிலையில், அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் முதலுதவி அளித்தும் அவரது உயிர் பிரிந்தது. உயிரிழந்த ஜுனைத் ரம்ஜான் நோன்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.