ரூ.8 லட்சத்தை உள்ளாடையில் பதுக்கி வசமாக சிக்கிய வங்கி ஊழியர்..

65பார்த்தது
ரூ.8 லட்சத்தை உள்ளாடையில் பதுக்கி வசமாக சிக்கிய வங்கி ஊழியர்..
கோயிலின் உண்டியல் தொகை ரூ.8 லட்சத்தை களவாடிய கனரா வங்கி ஊழியர் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். உத்திரபிரதேசம் மாநிலம் விருந்தாவனில் கோயில் உண்டியல் காணிக்கை தொகையை வசூலிக்கச் சென்ற கனரா வங்கியின் களப்பணியாளர் அபினவ் செகேனா ரூ.8 லட்சம் பணத்தை திருடி உள்ளாடையில் வைத்தபடி சிக்கியதால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரஜினி முருகன் படத்தின் நகைச்சுவை காட்சி பாணியில் சிசிடிவி கேமிரா பதிவுகளுடன் வங்கி ஊழியர் மாட்டிக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி