ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த மேடையில் நயினார் நாகேந்திரனுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மாநிலத் தலைவர் அண்ணாமலை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த நிலையில் நயினாருக்கு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடைசி நேரத்தில் வந்த உத்தரவால் நயினார் நாகேந்திரன் மேடை ஏற்றப்பட்டார். தமிழக பாஜக தலைவர் பதவி போட்டியில் நைனார்நயினார் நாகேந்திரன் உள்ள நிலையில் இது பேசுபொருளாகியுள்ளது.