தூத்துக்குடி: ரியல் எஸ்டேட் அதிபர் விஷம் குடித்து தற்கொலை
தட்டார்மடம் அருகே தொழிலில் அதிக நஷ்டம் ஏற்பட்டதால், ரியல் எஸ்டேட் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருஸ்முத்து மகன் ஜெயக்குமார் (46), இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தொழிலில் அதிக நஷ்டம் ஏற்படவே வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.