திருச்செந்தூர்: தெய்வானை நேரில் சந்தித்து கரும்பு வழங்கிய அமைச்சர் சேகர்பாபு

75பார்த்தது
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கடந்த 18 ஆம் தேதி இந்த தெய்வானை யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் யானை கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெய்வானையை நேரில் ஆய்வு செய்ய வருகை தந்தார். அவர் யானை கட்டப்பட்டுள்ள இடத்திற்கு சென்று அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை, கால்நடை மருத்துவர்களுடன் ஆய்வு செய்தார். மேலும் யானை உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து யானை பாகனான ராதாகிருஷ்ணன் மற்றும் செந்தில் ஆகியோரிடம் யானை குறித்து நலம் விசாரித்தார். உணவு தண்ணீர் உள்ளிட்டவை சகஜமாக உண்டு வருகிறது. மேலும் 21 நாள் தெய்வானை கண்காணிப்பு தேவை.

பக்தர்கள் அதிகம் வரும் இடம் என்பதால் யானை பாகன்கள் யானை அருகே இருக்க வேண்டும் என அமைச்சர் பாகன்களிடம் அறிவுறுத்தினார். ஒரு வார காலத்திற்குப் பின் மருத்துவர்கள், பாகன் இல்லாத ஒரு நபராக அமைச்சர் சேகர்பாபு தெய்வானையை அருகில் சென்று பார்த்து கரும்பு வழங்கினார்.பின்னர் அமைச்சர் சேகர்பாபு கோவிலில் சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி