இன்று கார்த்திகை மாதம் துவங்கியுள்ளது இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கியுள்ளனர் மேலும் கார்த்திகை மாதம் ஏராளமான பொதுமக்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பர்
இதன் காரணமாக தூத்துக்குடி திரேஸ் புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டதால் மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சீலா மீன்கள் இன்று ஒரு கிலோ 800 ரூபாய் வரை விற்பனையானது 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் விளைமின் கிலோ 350 ரூபாய்க்கும் ஊலி மீன் கிலோ 300 ரூபாய்க்கும் பாறை மீன் கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனையானது சாலை ஒரு கூடை 700 ரூபாய் வரையும் வங்கனை ஒரு கூடை ஆயிரம் ரூபாய் வரையும் வாலை மீன் கிலோ 120 ரூபாய் வரையும் விற்பனையானது
ஏற்கனவே வானிலை மைய எச்சரிக்கை மற்றும் மழை காரணமாக குறைவாகவே நாட்டுப் படகு கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வரும் நிலையில் மீன்களுக்கு விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்