*திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வி. கே. சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். *
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
அங்கிருந்து கார் மூலம்
வி. கே. சசிகலா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். அவர் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர்.
கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த சசிகலாவுடன் பக்தர்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் கைகொடுத்தும் மகிழ்ந்தனர்.