தூத்துக்குடி மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கென தனியே உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகி அரசின் நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது தாெடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கென தனியே இணையதள பக்கம் மற்றும் வலை பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள பக்கத்தில் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இ-சேவை மையத்தின் மூலம் வழங்கப்படும் அத்தியவாசியமான சான்றிதழ்கள் பெறுவது குறித்த விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. www. tnwidowwelfareboard. tn. gov. in என்ற வலை பயன்பாட்டின் வாயிலாக தங்களுக்கு தேவையான விவரங்களை கண்டு பயன் பெறலாம்.
உறுப்பினர் சேர்கைக்கான வலை பயன்பாடு 18. 06. 2024 அன்று முதல் பொது மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. வலை பயன்பாட்டின் மூலம் தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர் இணையதளம் மூலம் நேரடியாகவும் அல்லது அவர்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் தங்களின் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம்.