தண்ணீரில் இருக்கும் உப்பு காரணமாக பாத்ரூம் பைப்களில் கறை படிந்திருக்கும். இதை நீக்குவதற்கு ஒரு தட்டில் டூத் பேஸ்ட்டை கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, அரை ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை கொண்டு பைப்புகள், கறைபடிந்த இடங்களில் நன்றாக தேய்த்து அரை மணி நேரம் ஊற விட்டு, பின்னர் கழுவினால் கறைகள் நீங்கி, பாத்ரூம் பளிச்சென்று மின்னும்.