முடி வளர்ச்சிக்கு பயோடின் இன்றியமையாத பொருளாகும். பாதாம், வால்நட், பூசணி விதைகள், வெள்ளரி விதைகள், தர்பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், சியா விதைகள் ஆளி விதைகளை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும். இதை காலை, மாலை என இருவேளை பால் அல்லது சுடுதண்ணீரில் கலந்து குடித்து வந்தால் முடி கொத்து கொத்தாக வளரத் தொடங்கும். முயற்சி செய்து பாருங்கள்.