பெங்களூரூவை சேர்ந்த சுனில் குமார் - மம்தா தம்பதிக்கு ஷம்பு (7), ஷியா (3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். கடந்த வியாழன் (நவ. 21) கணவருடன் மம்தாவுக்கு சண்டை ஏற்பட்ட நிலையில் தனது குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மம்தா உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.