கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 4 லட்சத்து 10,931 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். பிரியங்கா மொத்தமா 6 லட்சத்து 22,338 வாக்குகள் பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தியன் மொக்கேரி 2,11,407 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த வெற்றியின் மூலம் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதி எம்.பி.யாக தேர்வாகியுள்ளார்.