திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக இசையமைப்பாளர் AR ரகுமான் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான, அவதூறான தகவல்களை கொண்ட சமூக ஊடக பதிவுகள், செய்தி கட்டுரைகள், யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவதூறு பதிவுகள், வீடியோக்களை நீக்காவிட்டால் சட்டப்பூர்வமாக வழக்கு தொடரப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.