தூத்துக்குடி: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தாளமுத்து நகர், குமரன் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் சுடலைமணி (35), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், குடும்ப தகராறில் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்று விட்டாராம். கடந்த ஒரு மாதமாக சுடலைமணி தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று (நவ.,15) இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.