தூத்துக்குடி: உப்பாற்று ஓடையின் கரைகளில் 12000 பனை விதைகள் நடும் பணிகள்
தூத்துக்குடி உப்பாற்று ஓடையின் கரைகளில் 12000 பனை விதைகள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பகுதியிலுள்ள உப்பாற்று ஓடையின் கரைகளில் 12000 பனை விதைகள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். இதில், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பச்சிராஜன், வைதேகி முத்துவேல், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து காெண்டனர்.