தூத்துக்குடி புத்தக திருவிழா; மேல்மருவத்தூர் நூல் அறிமுகம்

68பார்த்தது
தூத்துக்குடி புத்தக திருவிழா; மேல்மருவத்தூர் நூல் அறிமுகம்
தூத்துக்குடி புத்தக திருவிழா சங்கரப்பேரி திடலில் நடைபெற்று வருகிறது. நேற்று (அக்.,4) 2வது நாள் விழாவில் முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கில் எழுத்தாளர் முகில், சாளை பஷீர் ஆகியோர் முன்னிலையில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய மேல்மருவத்தூர் எனும் நூலை சப். கலெக்டர் (பயிற்சி) த. சத்யா வெளியிட்டார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் சக்தி. ஆர். முருகன் பெற்றுக்கொண்டார்.

உலகம் முழுவதிலும் ஆன்மிகத்தை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு சீரிய நடைமுறைகளை உருவாக்கி அதனை நடைமுறைபடுத்தியுள்ளார் என்பதனை விளக்கும் நூல். இந்த நிகழ்ச்சியில் காமராசு செல்வன் எழுதிய விடிலிக்காடு நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் காமராசு செல்வன், முத்தாலங்குறிச்சி காமராசு, ஓவியர் வள்ளிநாயகம், மாவட்ட நூலகர் முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர் முகில், சாளை பஷீர், சிற்பி பாமா, பயிற்சி சப் கலெக்டர் சத்யா ஆகியோர் பேசினார்கள். எழுத்தாளர் நெய்தல் ஆன்டோ, மாரிமுத்து, சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், துநிலை நூலகர் ராமசங்கர், ஓய்வு பெற்ற நூலகர் பிரமநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி