போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

72பார்த்தது
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்இளந்திரையன் துவக்கி வைத்தார்.

சட்டத்திற்கு புறம்பான பொதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பானது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அறக்கட்டளையோடு இணைந்து தொடர் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு (கூட்டு அறக்கட்டளை) சார்பில் தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையயத்தின் முதல்வர் வா. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் டி. முத்துமாலை, அய்யனடைப்பு முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர் ஆ. ஆதிநாராயணன், நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தின் இயக்குனர் அ. முத்துப்பாண்டியன், துளசி சோஷியல் டிரஸ்ட் இயக்குனர் எஸ். தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவரும், மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் படை உருப்பினருமான எம். ஏ. தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி