சண்டிகர்: திருமணம் செய்து கொள்ளாமல் ஜோடியாக வாழும் தம்பதிகள், தங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கக் கோரி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்து நீதிமன்றம், “லிவ்-இன் ஜோடியாக வாழும் தம்பதிகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது. மனுதாக்கல் செய்த இருவரில் ஒருவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவது தவறு செய்பவர்களை ஊக்குவிக்கும் செயலாக மாறிவிடும்” என தீர்ப்பளித்துள்ளது.