செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாபு என்பவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கூறுகையில், “ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த நபர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆணையரிடம் அளித்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தது தெரியவந்துள்ளது. 70% தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்” என்றார்.