சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி, உலகையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. HMPV (Human Metapneumo Virus) என்ற சுவாச நோய் அங்கு வேகமாக பரவி வருகிறது. கோவிட்-19 அறிகுறிகளைப் போலவே இதற்கும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “சீனாவில் பரவும் HMPV வைரஸ் தொற்று குறித்து இந்தியர்கள் அச்சப்பட தேவையில்லை” என பொது சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், “இது சாதாரண காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்தான். இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த தொற்று பாதிப்ப்பு ஏற்படவில்லை” என விளக்கமளித்துள்ளது.