உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு இரவு நேரத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அந்த பெண்ணுடன், காவலருக்கு பல வருடங்களாக பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த ஜன.1ஆம் தேதி இரவு, அப்பெண்ணுடன் கான்ஸ்டபிள் வீட்டிற்குள் இருந்த நிலையில் அவர்களை அப்பெண்ணின் கணவர் கையும் களவுமாக பிடித்தார். அதனைத் தொடர்ந்து, கான்ஸ்டபிளை சுற்றி வளைத்த கணவர் உள்ளிட்ட உறவினர்கள், அவரை சரமாரியாக தாக்கினர்.