சிறுத்தை தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு

56பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூர் பகுதியில், சிறுத்தை தாக்கி கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சூர் அருகே உள்ள சிவசக்தி நகர் பகுதியில் பணிக்குச் சென்று வீடு திரும்பிய சதீஷ் என்பவரை சிறுத்தை அடித்துக் கொன்றது. இதில், சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த அப்பகுதி மக்கள், சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி