பொங்கல் பண்டிகையையொட்டி பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகை வழங்கக்கோரி எதிர்கட்சி மட்டுமின்றி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. நம் அண்டை மாநிலமான புதுச்சேரி பொங்கலுக்கு ரொக்கப்பரிசு அறிவித்துள்ள நிலையில், பரிசுத்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு மீண்டும் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.