ஸ்பெயினில் கல்லறை ஒன்றின் புனரமைப்பின் பொழுது ஆடைகள், கண்ணாடிப் பொருட்கள், நகைகள் மற்றும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒயின் போன்ற பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீல் செய்யப்பட்ட இரும்பு கலசத்தின் உள்ளே ஒரு கண்ணாடி குடுவையினுள் அந்த ஒயின் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஜெர்மனியில் இருந்து கிடைக்கப்பெற்ற 4-ம் நூற்றாண்டு ஒயின் தான் உலகின் பழமையானது என்று அறியப்பட்ட நிலையில், தற்போது அந்த சாதனையை இது முறியடித்துள்ளது.