ஆசியாவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த நகரங்களின் பட்டியலில் கர்நாடக தலைநகர் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. பிரபல போக்குவரத்து குறியீடு நிறுவனமான TomTom வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2024 ஆம் ஆண்டு பெங்களூருவில் 10 கி.மீ தூரத்தை கடப்பதற்கு சராசரியாக 28 நிமிடங்கள் 10 நொடிகள் தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பட்டியலில் உலக அளவில் லண்டன் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.