LIC-யில் 2021-22 நிதியாண்டில் ரூ.652 கோடியும், 2022-23ல் ரூ.897 கோடியும், 2023-24ல் ரூ.880 கோடியும் கிளைம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. சுமார் 3.72 லட்சம் பாலிசிதாரர்கள் 2024ல் தங்கள் மெச்சூரிட்டி தொகையை திரும்ப பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. உங்கள் பாலிசி தொகை பத்து ஆண்டுகளுக்கு மேலாக கிளைம் செய்யப்படாமல் இருந்தால் அந்த தொகை மூத்த குடிமக்கள் நலநிதிக்கு(SCWF) மாற்றப்படும். இது மூத்த குடிமக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.