ஜப்தி என்ற பெயரில் மிரட்டல்; விவசாயிகள் புகார்

57பார்த்தது
ஜப்தி என்ற பெயரில் மிரட்டல்; விவசாயிகள் புகார்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள் திரும்பச் செலுத்தாத நிலையில், ஜப்தி என்ற பெயரில் மிரட்டல் விடுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

கோவில்பட்டி வெங்கடாசலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்றவா்களில் சிலா், தங்கள் வாங்கிய கடன் தொகையை அசலுடன் கூடிய வட்டியுடன் கட்டினாா்களாம். பின்னா் சில காலம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்து 10 போ் கொண்ட கும்பல், தவறான தொகையை குறிப்பிட்டு கட்டச் சொல்லி வற்புறுத்தி வருகின்றாா்களாம். அவ்வாறு கட்டவில்லை என்றால் ஜப்தி செய்து விடுவோம் என மிரட்டி வருகின்றனர்.

எனவே ஊனமுற்றோா், சிறு குறு விவசாயிகள், வருமானம் இல்லாத விவசாயிகளை கூட்டுறவு சங்கம் தொந்தரவு செய்யக் கூடாது என்றும், அதிக வட்டி இல்லாமல் அசலை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜப்தியை முற்றிலும் நிறுத்த வலியுறுத்தியும் தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமையில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி, விவசாயிகள் ஞானமூா்த்தி, ஆதிநாராயணசாமி, குருசாமி, காங்கிரஸ் நிா்வாகி சுந்தர்ராஜ், சமூக ஆா்வலா் சேதுராமசாமி ஆகியோா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினிடம் வழங்கினா்.

தொடர்புடைய செய்தி