மட்டன், சிக்கனுக்கு மாற்றாக அதே சுவையுடன் சைவத்தை சுவைக்க விரும்புபவர்கள் பலாக்காய் மற்றும் சோயாவை பயன்படுத்தலாம். மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை ஈடுகட்ட சைவ பிரியர்கள் ராஜ்மா, ஆளி விதைகள், பாதாம், வால்நட் உட்கொள்ளலாம். பாலை அசைவமாக நினைப்பவர்கள் அதற்கு பதிலாக தேங்காய்ப்பால், சோயா பால் உட்கொள்ளலாம். பன்னீருக்கு மாற்றாக டோஃபுவை உட்கொள்ளலாம். டோஃபு சோயா பாலில் இருந்து பெறப்படும் ஒரு பாலாடைக் கட்டியாகும்.