அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (அக். 1) கட்சியின் ஐடி விங் நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துக் கொண்டார். அதிமுக தொண்டர்கள் மத்தியில் அவர் இருந்த போது திடீரென பறந்து வந்த செல்போன் அவர் மீது விழுந்தது. காதில் வேகமாக செல்போன் பட்டது அவரை சிறிது பதற வைத்ததோடு இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.