பகல் நேர நேரடி ரயில்: பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை!!

74பார்த்தது
பகல் நேர நேரடி ரயில்: பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை!!
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற சங்க மகாசபைக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் ஏ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். செயலர் மா. பிரமநாயகம் அறிக்கை வாசித்தார்.

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும். தூத்துக்குடி- பாலக்காடு ‘பாலருவி’ விரைவு ரயிலில் தலா ஒரு 3 அடுக்கு, 2 அடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், ஓர் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியை கூடுதலாக இணைக்க வேண்டும். தூத்துக்குடி- சென்னை இடையே பகல் நேர நேரடி ரயில் இயக்க வேண்டும்.

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் மைசூர் விரைவு ரயில், மேட்டுப்பாளையம் விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், ஓஹா விரைவு ரயில்கள் நின்றுசெல்ல வேண்டும். தூத்துக்குடி- திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி -காரைக்குடி, காரைக்குடி- விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டர்களை ரயில்கள் செல்லும் நேரத்தில் இயக்க வேண்டும். தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்திலிருந்து பயணிகளின் வசதிக்காக அதிகாலையில் புதிய, பழைய பேருந்து நிலையங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி