மாணவர்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

54பார்த்தது
மாணவர்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறை சார்பாக பசுவந்தனை மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று (27. 06. 2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அதன்படி பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துமணி தலைமையிலான போலீசார் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனோ கல்லூரியில் இருந்து மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. கமலாதேவி மற்றும் போலீசார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பரம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி