குடும்பத்துடன் நேரம் செலவிடுவது ஆயுளை நீட்டிக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அன்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும் இடம் குடும்பம் தான். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டால் அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. உறவுகளை வலுப்படுத்த குடும்பத்தாருடன் மனம்விட்டு பேச வேண்டும்.