ஐபிஎல்-2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். சுரேஷ் ரெய்னாவின் நீண்ட கால சாதனையை தோனி முறியடித்துள்ளார். சுரேஷ் ரெய்னா 176 போட்டிகளில் 4687 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது தோனி 236 போட்டிகளில் 4697 ரன்களை குவித்துள்ளார். மூன்றாவது இடத்தில் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (2721) இருக்கிறார்.