இங்கிலாந்தில் இருந்து ஸ்காட்லாந்து சென்ற Ryan air விமானத்தில் லக்கேஜ் கட்டணத்தை தவிர்ப்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த கிரேஸ் ஹேலே (20) என்ற பெண் மேக்கப் பை மற்றும் ஓவர் கோட்டை மறைத்து வைத்து கர்ப்பமாக இருப்பதுப்போல் நடித்துள்ளார். 26 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருந்தால் மருத்துவர் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், 24 வார கர்ப்பிணி போல் வயிற்றை தயார் செய்துள்ளார். பிறக்க போகும் ஆண் குழந்தைக்கு Ryan எனப் பெயரிடப்போவதாகவும் நக்கல் அடித்துள்ளார்.