மியான்மர் மற்றும் பாங்காக்கில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பேரழிவு நிகழ்ந்தது. இதில் பல உயரமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1000க்கும் மேற்பட்டோ உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் காதல் ஜோடி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து நீச்சல் குளத்தில் ஹாயாக படுத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.