பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய திமுகவினர்

63பார்த்தது
*விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டதையடுத்து திருவாரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்*

விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அண்ணியூர் சிவா அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டதையடுத்து திருவாரூரில் திமுகவினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவினர் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ்,
தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி