பாடைகட்டி மாரியம்மன் கோவில் தெப்ப திருவிழா

61பார்த்தது
வலங்கைமானில் அருள் பாலித்து வரும் சீதாளாதேவி என்று அழைக்கப்படும் பாடைகட்டி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வருடத்திற்கு இருமுறை திருவிழா கொண்டாடப்படுகிறது, அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பாடை கட்டி திருவிழாவானது நடைபெறுகிறது.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்கின்றனர். மேலும் அன்றைய தினம் பால்காவடி, அழகு காவடிமயில் காவடி, பாடை காவடி, உள்ளிட்ட காவடிகளை அவர்களது வழக்கப்படி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

அந்த வகையில் இரண்டாவது வருடாந்திர திருவிழாவான, ஆவணி கடை ஞாயிறை முன்னிட்டு தெப்ப திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவாரூர் மட்டுமின்றி அருகே உள்ள கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, மன்னார்குடி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்தும், தெப்ப திருவிழாவை காணவும், மிகவும் விசேஷ தினமான கடை ஞாயிறை முன்னிட்டு மாரியம்மனை தரிசிக்கவும் வந்து செல்கின்றனர்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருக்குளத்தில் வலப்பக்கம் மூன்று முறையும் , இடப்பக்கம் மூன்று முறை தெப்பமானது வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி