குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

61பார்த்தது
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் ஆற்றுப் பாசனத்தை நம்பியே விவசாயிகள் உள்ளனர்.
ஜூன் 12-ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் காவிரி தண்ணீர் திறந்து குறுவை சாகுபடி துவங்கும் நிலையில். இது நாள் வரை மேட்டூரிலிருந்து காவிரி தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் அதிக அளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபடாத நிலை உள்ளது.
குறுவை சாகுபடிக்கு திருவாரூர் மாவட்டத்தில் 91 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு அரசு இலக்கு வைத்துள்ள நிலையில். நேரடி விதைப்பு மற்றும் நடவு மூலமாக 45 ஆயிரம் ஏக்கர் தான் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர்.
ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறு மற்றும் பம்பு செட் உள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் தண்ணீர் வராத நிலையில் விவசாய கூலி தொழிலாளர்கள் விவசாய வேலை இல்லாமல் கட்டிடப் பணிக்கு செல்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் விவசாயம் செய்வதற்கு ஆள் இல்லாமல் போய்விடும்.
இதனால் எதிர் வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும், கால்நடைகளுக்கு வைக்கோல் இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
எனவே அரசு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி