மாநில அளவிலான கைப்பந்து போட்டி வடுவூரில் தொடங்கியது.

74பார்த்தது
வடுவூரில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கிடையான கைப்பந்து போட்டி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் கிராமத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி இன்று தொடங்கியது. பள்ளி மாணவர்களுக்கிடையேயான மாநில கைப்பந்து போட்டியில் வடுவூர், திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை, தர்மபுரி என மொத்தம் 24அணிகள் பங்கேற்றன. ஆடவர் மகளிர் என இருவருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்று வருகிறது. கைப்பந்து போட்டிகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பழனி மாணிக்கம் தொடங்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் திருச்சி விளையாட்டு விடுதி அணியும் ஈரோடு குமுதா மெட்ரிக் பள்ளி அணிகளும் மோதின இதை போல் பெண்கள் பிரிவில் தர்மபுரி அரசு பெண்கள் விடுதி அணியும் ஈரோடு மகளிர் அணியும் மோதின. மூன்று நாள் நடைபெறும் தொடர் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி