நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சியின் போது 80 கிலோ எடையை தூக்கியதால் காயம் அடைந்தார். சப்போர்டிவ் பெல்ட் இல்லாமல் எடையை தூக்கியதால் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அக்., 5ஆம் தேதி நடந்தது. இதனால், அண்மையில் உடல்நிலை மோசமடைந்தது. சில நரம்புகள் செயலிழந்து, குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் ஓய்வில் உள்ளார். தனது உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.