அம்மா உணவகங்களில் நேற்று 1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு

52பார்த்தது
அம்மா உணவகங்களில் நேற்று 1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நேற்றும் இன்றும் (அக்., 16, 17) சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். நேற்று காலை, பிற்பகலில் 78,557 பேருக்கும், இரவில் 29,316 பேருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினமும் அம்மா உணவகங்களில் உணவு வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி