நெல்லை மாவட்டம் அம்பை அயன் சிங்கம்பட்டியை சேர்ந்தவர் முத்துலெட்சுமி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தனது கணவருடன் விவாகரத்து பெற்றுள்ளார். தொடர்ந்து வேறு ஒருடருடன் வாழ்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது முத்துலெட்சுமி தலையில் மர்ம நபர் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயத்துடன் அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த டிஎஸ்பி சதீஷ் குமார் தலைமையில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.