மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ சங்க செயலாளர்
மருத்துவர் மணவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவர்கள் செவிலியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில்
இந்திய மருத்துவ சங்கத்தின்
முன்னால் பொறுப்பாளர்கள் மருத்துவர்
நாகராஜன், சித்ரா, பாரதிசெல்வன், அசோகன், சீனிவாச ராகவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.