சவுடு மண் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

52பார்த்தது
சவுடு மண் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு
திருவள்ளுர் அடுத்த சிற்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் 35 வயதான வினோத்குமார். இவருக்கு திருமணம் ஆகி அனுசியா என்ற தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார், இளைஞர் வினோத்குமார் சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் தினந்தோறும் சிற்றத்தூர் பகுதியில் இருந்து செவ்வாய்பேட்டை ரயில்வே நிலையத்திற்கு இருசக்கர வாகனம் மூலம் பயணித்து, இருசக்கர வாகனத்தை ரயில்வே நிலைய இருசக்கர வாகன நிறுத்தமிடத்தில் விட்டுவிட்டு பணிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார்,

இந்நிலையில் வழக்கம்போல் தனது சொந்த கிராமமான சிற்றத்தூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் அம்பத்தூர் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருக்கும்போது தண்ணீர்குளம் அடுத்த தண்டலம் பகுதியில் பின்னால் வந்த சவுடு மண் லாரி அதிவேகமாக மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற வினோத்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை அறிந்த தண்டலம் கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்தனர். இருப்பினும் லாரி ஓட்டுனர் தப்பிச்சென்ற நிலையில் வினோத்குமாரின் உறவினர்கள் சாலையிலேயே உயிரிழந்த வினோத்குமாரின் உடலைக் கண்டு கதறி அழுத காட்சி காண்போரின் கண்களிலும் கண்ணீரை வர வைப்பதாக இருந்தது

தொடர்புடைய செய்தி