புழல் கங்காதரன் தெரு மாநகராட்சி பூங்காவில் நேற்று மதியம், புள்ளிமான் ஒன்று வழிதவறி வந்துள்ளது. அதை நாய்கள் கடித்து குதறிய நிலையில், காயம்பட்டு தவித்தது. இதுகுறித்து பகுதி பொதுமக்கள், போலீசார், வனவிலங்கு பாதுகாப்பாளர்களுக்கு தகவல் அளித்தனர்.
ஆனால், ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பின்பும், புள்ளி மான் வனவிலங்கு பாதுகாப்பாளர்களால் மீட்கப்படவில்லை. இதனிடையே காயம்பட்ட புள்ளிமானை, பகுதி மக்கள் பத்திரமாக பூங்காவிலேயே கட்டி வைத்தனர்.
நேற்று இரவு 8: 00 மணிக்கு பின்னரே, வனவிலங்கு பாதுகாப்பாளர்கள் மானை மீட்டுச் சென்றுள்ளனர். கடந்த 11ம் தேதி இதேபோல் ஒரு புள்ளிமான் வழிதவறி வந்து, காயம் பட்டு பலியானது. தற்போது இரண்டாவது முறையாக மேலும் ஒரு புள்ளிமான் வழிதவறி வந்துள்ளது.