போட்டோ ஜியோ, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சார்பில்
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், தலைமையில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில்
தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசு நிதி பற்றாக்குறையினால் 2020ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
சரண்விடுப்பு சலுகையினை 01. 04. 2026 முதல் பணமாக்கிக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டு இருப்பதை முழுமையாக ரத்து செய்து விட்டு, 01. 04. 2025 முதல் பணமாக்கிக் கொள்ளலாம் என ஆணை வழங்கிட வேண்டும் எனவும்,
தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத்தொகையினை பணியாளர்களுக்கு வழங்காமல், நிலுவையாக உள்ளதால், அதனை விடுவித்து நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும் என
உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.