கேரளாவில் 2017ஆம் ஆண்டு பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பல்சர் சுனி முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நடிகையை வன்கொடுமை செய்ய நடிகர் திலீப் ரூ.1.5 கோடி கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வன்கொடுமையை வீடியோ பதிவு செய்ய தனக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோவே விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக தற்போது மாறியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.